search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற காட்சி.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய கோவில்களுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்த சிறப்பு பஸ் வருகிற 25-ந் தேதி மற்றும் ஜனவரி 1, 8-ந் தேதி ஆகிய 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய கோவில்களுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா பயணி களை ஏற்றிக்கொண்டு சிறப்பு பஸ்கள் புறப்பட்டது. இந்த பஸ் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடக நல்லூர், குன்னத்தூர்

    ( செங்காணி), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூ மங்கலம் ஆகிய நவகைலாய கோவில்களை சென்றடைந்து மீண்டும் நெல்லை புதிய பஸ் நிலையம் வந்ததடைந்தது.

    இந்த சிறப்பு பஸ் வருகிற 25-ந் தேதி மற்றும் ஜனவரி 1, 8-ந் தேதி ஆகிய 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு காலை 8 மணி முதல் இரவு 8 மணி செய்து கொள்ளலாம் என்று நெல்லை போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×