search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு - பிடிக்க முயன்ற போது தீயணைப்பு நிலைய வீரரை கடித்தது
    X

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு - பிடிக்க முயன்ற போது தீயணைப்பு நிலைய வீரரை கடித்தது

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
    • பாம்பு கடித்த தீணணைப்பு வீரர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நெல்லை, அக்.27-

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தரைதளத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது.

    இங்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ேநற்று ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாரி ஒருவரின் காலின் அருகில் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை அறிந்தார். பின்னர் அது பாம்பு என்று அறிந்ததும் சுதாரித்து கத்தி கூச்சலிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் பதறியபடி வெளியே சென்றனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செனறு பாம்பை தேடும்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஆனால் அதற்குள் அந்த பாம்பு மறைவிடத்திற்கு சென்றது. எனினும் வெகுநேரமாக பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை தேடினர். ஆனால் அது சிக்கவில்லை.

    இதனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்லாமல் அச்சமுடன் வாசலிலேயே வெகுநேரம் காத்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சாரைப்பாம்பு நிற்பதை பார்த்தனர். அதனை தீயணைப்பு வீரர் அமல்ராஜ் என்பவர் பிடிக்க முற்பட்டார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சகவீரர்கள் அந்த பாம்பை பிடித்து சென்றனர்.

    Next Story
    ×