search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில்  பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம், சிவபத்மநாதன் மனு
    X

    கலெக்டரிடம், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு அளித்த காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம், சிவபத்மநாதன் மனு

    • மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.
    • திருச்சிற்றம்பலத்தில் உள்ள பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டரை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சந்தித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோரிக்கை சம்பந்த மான மனுக்களை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    இலஞ்சி பேரூராட்சியில் மண்பாண்ட தொழில் மிகப் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்கி வருகிறது.

    பானைகள் தயார் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிற குடோன் கடந்த வாரம் காற்றில் சேதம் அடைந்து உள்ளது.

    எனவே மீண்டும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, தவணை மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழு வார்டுகளில் சாலை பணிகள் அமைக்கப்பட வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட வேண்டும், என்ற கோரிக்கையை வைத்துள்ளார். எனவே அதனையும் நிறைவேற்ற வேண்டும்.

    தொடர்ந்து தென்காசி ஒன்றிய துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன் திருச்சிற்றம்பலத்தில் செயல்பட்டு வருகிற பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் வைத்துள்ளார்.

    மாவட்ட கழகம் சார்பில் ஏற்கனவே மாவட்ட தலைமை நீதிமன்றம் அமைப்பதற்கும் நீதிபதிகள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டுவதற்கும் 2ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அதற்கு முறையாக பாதை வசதி இல்லை. ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்ததன் பேரில் அறநிலை துறை ஆணையர் மற்றும் அறநிலை துறை அமைச்சர், அதன்பிறகு இணை ஆணையர் ஆகியோ ரை சந்தித்து பிள்ளையன் கட்டளைக்கு பாத்தியப்பட்ட இடம் சுமார் 40 சென்ட் நீதிமன்றம் கட்டப்பட இருக்கிற இடத்திற்கு வழி பாதைக்கு தேவைப்படுகிறது.

    ஆணையரிடமிருந்து கடிதம் வந்ததன் அடிப்படை யில் மாவட்ட கலெக்டர் தாங்களே பாதைக்கு தேவையான இடங்களை அதற்குரிய கட்டணத்தை அறநிலையத்துறைக்கு செலுத்தி விட்டு நில ஆர்ஜிதம் செய்யலாம் என்று சட்டத்தில் விதி இருக்கிறது. அதன் அடிப்படையில் நீதிமன்ற கட்டிடம் அமையும் இடத்திற்க்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், மாவட்ட துணை செயலாளர் கென்னடி, சொக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தென்காசி ஒன்றிய துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், சந்தோஷ், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×