என் மலர்
சிவகங்கை
இதில் ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். இதில் முத்து மாரியம்மனுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பூசாரி சுப்பிரமணியன் சிறப்பு பூஜைகளை செய்தார்.
இதேபோல் வீரஅழகர் கோவிலில் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழாவில் மானாமதுரை சுந்தரபுரம் குண்டுராயர் வீதி சிவகங்கை ரோடு வியாபாரிகள் சார்பில் நடந்த விழாவில் வீரஅழகர் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.
மானாமதுரை அருகே உள்ள பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பிரித்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குறிச்சி கிராமத்தில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு பூஜை நடந்தது.
தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மானாமதுரையில் உள்ள ஓம்சக்தி கோவில், நம்பி நாகம்மாள், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மானாமதுரை:
மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் காந்தி சிலை முன்பு உடைகுளம், சிப்காட், கன்னார் தெரு ஆகிய பகுதியில் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது.
இதை பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் அமைக்காததால் பயன்பாடின்றி உள்ளது. பயன்படாத பயணிகள் நிழற்குடையில் தற்போது புகை பிடிப்பவர்கள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். புகை பிடிப்பவர்கள் விடும் புகையால் நிழற்குடை அருகே நிற்கும் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
இதேபோல் மானாமதுரை பை–பாஸ் சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரிமா சங்கம் சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. 4 வழிச்சாலை பணி தொடங்கப்பட்டதால் தற்போது அது பயன்பாடின்றி காணப்படுகிறது.
பயன்படாத பயணிகள் நிழற்குடை தற்போது சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் நிழற்குடை மீது மோதும் நிலையும் உள்ளது
ஆபத்தான பயணிகள் நிழற்கூடத்தை அகற்றி 4 வழிச்சாலை, பை–பாஸ் சாலையில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். பயன்படாமல் உள்ள பயணிகள் நிழற்குடையில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே தேவகோட்டை பகுதியில் உள்ள உமையாண்டவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன். இவரது மகன் தவச்செல்வம் (வயது27). இவர் நேற்று மாலை புது வயலில் இருந்து சாக் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே வேகமாக வந்த ஒரு லாரி சிக்னல் காட்டாமல் திடீரென திரும்பியது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த தவச்செல்வம் நிலை குலைந்து லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதினார்.
இதில் லாரியின் பின் பக்கத்தில் இருந்த கொக்கி அவரது முகத்தை கிழித்தது. ரத்த வெள்ளத்தில் கிழே சாய்ந்த தவச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சாக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த சின்னராஜா என்பவரை கைது செய்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த செங்கமலம் என்ற 6–ம் வகுப்பு மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் கடத்திச்சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் அந்த வாலிபரும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதுகுறித்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் கழுத்து அறுப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சிகிச்சையில் குணமடைந்த கார்த்திக்கை நேற்று போலீசார் மானாமதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி ராஜமகேசுவரர், வருகிற 29–ந்தேதி வரை வாலிபர் கார்த்திக்கை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள கீழவயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டு (வயது52). விவசாய பணி செய்து வந்த இவர் நில புரோக்கராகவும் செயல்பட்டு வந்தார்.
கடந்த 11–ந்தேதி இரவு வெளியே சென்ற கிருஷ்ணன் தேவகோட்டை–சிவகங்கை சாலையில் இரவில் பிணமாக கிடந்துள்ளார். வாகன விபத்தில் அவர் பலியாகி இருக்கலாம் என கருதப்பட்டது. இது தொடர்பாக விபத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயி கிருஷ்ணன் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரது மகன் சுரேஷ் (32) உறவினர்களுடன் தேவகோட்டை காவல் நிலையம் வந்து ஒரு மனு கொடுத்தார்.
அதில் 2 மாதத்துக்கு முன்பு தனது தந்தை மீது ஒரு வாகனம் மோதியதாகவும் அதில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பிய நிலையில் இது குறித்து போலீசில் புகார் செய்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சாலையில் பிணமாக கிடந்த தந்தை (கிருஷ்ணன்) முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
புகாரை பெற்று கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், இது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்புவனம்:
திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்தது பெத்தானேந்தல் பஞ்சாயத்து. இங்குள்ள தொடக்கப்பள்ளியில் சுமார் 50 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி கட்டிடம் கட்டி 30 வருடங்களுக்கு மேலாகியுள்ளதால் கட்டிடம் மராமத்து பார்க்காததாலும் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கு படிக்கும் சுமார் 50 மாணவ–மாணவிகள் மரத்தடியில் படித்து வருகிறார்கள்.
பள்ளி கட்டிடம் தான் இதுமாதிரி என்றால் அங்கன்வாடி கட்டிடமும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளை பள்ளிக் கட்டிடத்திற்கு முன்புள்ள இடத்தில் படிக்க வைக்கும் நிலைமை உள்ளது. மாணவ– மாணவிகளின் நலன் கருதி புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டியைச் சேர்ந்தவர் பேரின்பம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீதாலெட்சுமி (வயது 45).
இதே கிராமத்தைச் சேர்ந்த இவர்களுடைய உறவினர் ராஜாகண்ணன். இவருடைய மனைவி ரேவதி (35). திருப்பத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் பராமரிப்பு பணிக்காக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், மாலையில் மின்சாரம் வந்தவுடன் அந்த பகுதியில் பொதுப் பயன்பாட்டிற்காக உள்ள மின் மோட்டார் மூலம் அப்பகுதியினர் தண்ணீர் பிடித்தனர். அப்போது, தண்ணீர் பிடிப்பதில் சீதாலெட்சுமிக்கும், ரேவதிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு கைகலப்பானது. அப்போது, ரேவதியும், அவருடைய மாமியார் வள்ளியும் (65) சேர்ந்து சீதாலெட்சுமியை அடித்து தாக்கி கீழே தள்ளினர். இதில், கீழே விழுந்த சீதாலெட்சுமியின் பின் தலையில் அடிபட்டு மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து ரேவதி, அவருடைய மாமியார் வள்ளி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் உசேன் அம்பலம் தெருவை சேர்ந்தவர் ஜான்டேவிட் (வயது52). இவர் மதுரை ரோட்டில் உள்ள ஒரு பிரபல அரசு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். நேற்று காலை ஜான்டேவிட் தனது கணக்கில் ரூ.48 ஆயிரம் டெபாசிட் செய்வதற்காக சென்றார். அங்கு டோக்கனை பெற்று கொண்டு அமர்ந்திருந்தார்.
சிறிது நேரத்தில் அவரது டோக்கன் எண் வாசிக்கப்பட்டது. உடனே ஜான்டேவிட் தான் வைத்திருந்த பணப்பையை இருக்கையில் மறந்து வைத்துவிட்டு கவுண்டருக்கு சென்றார். பின்னர் ஞாபகம் வரவே அமர்ந்திருந்த இருக்கையில் சென்று பார்த்தபோது பணப்பை மாயமாகி இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து திருப்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் வெங்கட சுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். வங்கியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை எடுத்து செல்வது பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள கல்லல் பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன் (வயது40). இவர் காரைக்குடி ரோட்டில் உள்ள கும்மங்குடிபட்டியில் செயல்பட்டு வரும் டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வள்ளியப்பன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கம்மலூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு தனியார் பள்ளி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வள்ளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பின் அமர்ந்து வந்தவர் படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து நாச்சியார்புரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.






