என் மலர்
செய்திகள்

மாணவியை கடத்திச்சென்று கொலை செய்த வாலிபர் சிறையில் அடைப்பு
மானாமதுரை அருகே 6–ம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று கொலை செய்த வாலிபர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த செங்கமலம் என்ற 6–ம் வகுப்பு மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் கடத்திச்சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் அந்த வாலிபரும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதுகுறித்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் கழுத்து அறுப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சிகிச்சையில் குணமடைந்த கார்த்திக்கை நேற்று போலீசார் மானாமதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி ராஜமகேசுவரர், வருகிற 29–ந்தேதி வரை வாலிபர் கார்த்திக்கை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story