என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    காரைக்குடி:

    மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் சார்பில் காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினம் தொடங்கி வைத்தார். ஊர்வலம் காரைக்குடி பெரியார் சிலையில் இருந்து தொடங்கி அண்ணாசிலை, பழைய பஸ் நிலையம், வ.உ.சி. சாலை, கழனிவாசல், வாட்டர் டேங்க், வருமான வரித்துறை அலுவலக சாலை, ராஜீவ்காந்தி சாலை, புதிய கோர்ட்டு வழியாக புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அகிலன், ரமேஷ்கண்ணன், சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் மற்றும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நித்யா மோட்டார்ஸ் ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    சிவகங்கையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண்களை தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா குமாரப்பட்டியை சேர்ந்தவர் பார்வதி (வயது 30). இவர் சம்பவத்தன்று மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பார்வதியை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம ஆசாமிகள் 3 பேரும், பார்வதியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    தேவகோட்டையை அடுத்துள்ள திருவேகம் பத்தூர் அருகே குமாணி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜெயா (41). இவர் சம்பவத்தன்று பாவனக்கோட்டையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த 2 நபர்கள், ஜெயாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.

    உஷாரான ஜெயா செயினை இறுக்க பிடித்துக் கொண்டார். இதில் அவர் கீழே விழுந்தார். சில மீட்டர் தூரம் ஜெயாவை இழுத்து சென்ற கொள்ளையர்கள் அவரை தாக்கி 2 பவுன் செயினை பறித்து சென்றனர். 5 பவுன் செயின் ஜெயா கையில் இருந்தது.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருவேகம் பத்தூர் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் நகைப்பறி, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து சென்று கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மதுரை - சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் வறட்சியால் நெற்பயிர்கள் கருகின. பருவ மழை பொய்த்துபோனதால் குடிநீர் பிரச்சினையும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 8 தாலுகாக்கள் மற்றும் 445 ஊராட்சிகளை உடையது. நகரங்களை விட கிராமப்புறங்களே அதிகம். தமிழகத்திலேயே அதிக கண்மாய்கள், குளங்கள் அமைந்த மாவட்டம் ஆகும்.

    மழையை நம்பித்தான் இம்மாவட்டம் உள்ளது. இதில் திருப்புவனம், மானாமதுரை தாலுகா மட்டும் வைகை பாசனத்தை நம்பி உள்ளது. வைகையிலும் வெள்ளம் வந்தால் மட்டுமே இப்பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும். மற்ற நாட்களில் மாவட்டத்திற்குரிய வைகை தண்ணீர் கிடைப்பதில்லை. விவசாயிகள் இதற்கான வரியை செலுத்துகிறார்கள். ஆனால் வைகை தண்ணீர் கிடைப்பதில்லை.

    பெரியார் பாசனம் சிவகங்கை தாலுகாவில் ஒரு பகுதிக்கு மட்டும் வழங்கப்படுகிறது. தற்போது அதுவும் உரிய அளவு கிடைப்பதிலலை. எனவே மாவட்ட விவசாயிகள் பருவமழையை நம்பித்தான் உள்ளார்கள். வைகை, பெரியார் பாசன பகுதிகளில் இரண்டு முறை விவசாயம் நடக்கும. மற்ற பகுதிகளில் ஒருமுறை மட் டுமே விவசாயம் நடக்கும்.

    தற்போது பருவ மழை போதிய அளவை விட மிகவும் குறைவாக பெய்ததால் ஒருபோக விவசாயம் கூட பயனற்றதாகி விட்டது. வறட்சி காரணமாக திருப்புவனம் தாலுகா இந்த ஆண்டு கடும் வறட்சியில் சிக்கி உள்ளது. திருப்புவனம் தாலுகாவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் விளையாமல் “சாவி”யாகி விட்டன.

    தென்னை தொழிலுக்கு பெயர் போன திருப்புவனத்தில் மழை இல்லாததால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய் உள்ளன. மேலும் மாற்றாக வெற்றிலை பயிரிடுவார்கள். அதுவும் சரிவர இல்லை. மானா மதுரை தாலுகாவிலும் இதே நிலை நீடிக்கிறது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விட்டது. இளையான்குடி பகுதியில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒருசில இடங்களில் மாடுகளுக்கு தீவனத்திற்காக “சாவி”யான நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படுவது பரிதாபமாக உள்ளது. தொடர்ந்து மூன்று முறை நெற்பயிர்கள் கருகி விட்டது. இதற்கு மாற்று பயிராக மிளகாய், எள் போன்றவற்றை பயிரிட்டும் போதிய மழை இல்லாததால் அதுவும் கருகி விட்டது.

    தமிழகத்திலேயே இளையான்குடி பகுதி மிளகாய்க்கு பெயர் பெற்றதாகும். ஆனால் இந்த ஆண்டு அந்த பயிர்களும் கருகி விட்டது. காரைக்குடி, கல்லல், தேவகோட்டை, கன்னங்குடி, சாக்கோட்டை ஆகிய பகுதிகளில் 80 சதவீத நெற்பயிர்கள் கருகி விட்டது.

    மழை இல்லாததால் கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இல்லை. போர்வெல் கிணறுகள் மூலமாக போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கால்நடைகள் தீவனத்திற்கும், குடிப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் அரசு இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காவிடில், விவசாயிகளின் வாழ்க்கை நிலை மிகவும் கேள்விக் குறியாகி விடும்.

    மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை வைகை நீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வைகை வறண்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது.

    திருமங்கலம், மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி உள்பட பல பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, பூ வகைகள் மற்றும் சிறு தானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படும் பகுதியாகும்.

    இதில் பல இடங்களில் பருவ மழையை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு உள்பட பல பண பயிர்களை பயிரிட்டு இருந்தனர். வளர்ந்து வந்த நிலையில் பருவ மழை பொய்த்ததால் கருக தொடங்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதம் அடைந்தது. மதுரை மாவட்டத்தில் 85 சதவீதம் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் வறட்சி காரணமாக இந்த ஆண்டு சம்பா சாகுபடி 6 ஆயிரத்து 82 ஹெக்டேர் நிலம் மட் டுமே சாகுபடி நடக்கிறது. இதில் 85 சதவீதம நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது. வறட்சியால் நெல் நடவு பணி முற்றிலும் பாதித்து உள்ளது.

    சிறு தானியங்களை பொறுத்தவரை இந்தாண்டு 26 ஆயிரம் ஹெக்டேருக்கு பதில் 23 ஆயிரத்து 732 ஹெக்டேரிலும், எண்ணை வித்து பயிர்கள் 9 ஆயிரத்து 930 ஹெக்டேருக்கு பதில் 1652 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது. இதேபோல பருத்தி, கரும்பும் குறைந்த அளவு நிலபரப்பிலேயே பயிரிடப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் சராசரியாக பருவ மழை 145 மி.மீ. அளவில் இருக்க வேண்டும். ஆனால் இந்தாண்டு வெறும் 12.36 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளதால் விவசாயம் மட்டும் அல்ல குடிநீர் பிரச்சினையும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதால் பொதுமக்களும் பீதியில் உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தை இந்த ஆண்டு வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்படைந்துள்ளது. வடகிழக்கு, தென் மேற்கு பருவ மழைகள் மட்டுமின்றி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் மழையும் இந்த மாவட்டத்தை வஞ்சித்து விட்டது.

    இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 7 அணைகளும், 990 கண்மாய்களும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் இல்லாததால் கிணறுகள் வறண்டுள்ளன. இதனால் மக்கள் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவலம் உள்ளது. ஒரு குடம் தண்ணீர் 7 முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    மழை பொய்த்ததன் காரணமாக மாவட்டத்தில் 3¼ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி பயிர்கள் கருகி விட்டன. மக்காச்சோளம், நெல், குதிரைவாலி, கரும்பு, வாழை, பருத்தி போன்றவை மண்ணில் சாய்ந்து விட்டன.

    இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். கருகிய பயிர்களுடன் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பலமுறை விவசாயிகள் வந்து கண்ணீர் வடித்தனர். காத்திருப்பு போராட்டம் நடத்த சென்றபோது, போலீ சாரால் கைது செய்யப்பட்டனர்.

    பக்கத்து மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்தபோது கூட, விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் இயல்பாக பெய்யும் மழையைவிட 150 மி.மீ. குறைவாகவே பெய்துள்ளது. மொத்தத்தில் விருதுநகர் மாவட்டம் மழை மறைவு பிரதேசமாகி விட்டது என்கின்றனர் அங்குள்ள விவசாயிகள்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கமாக 458 மி.மீ. அளவில் பெய்ய வேண்டிய மழை இந்தாண்டு வெறும் 170 மி.மீ. அளவே பெய்துள்ளதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

    இதனால் சுமார் 1840 கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டே காணப்படுகிறது. பருவமழையை நம்பி சுமார் 1 லட்சத்து 19 ஆயிரத்து 886 ஹெக்டேர் நிலபரப்பில் நெல் பயிர் பயிடப்பட்டு இருந்தது போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது.

    இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இந்த வறட்சியால் 2 விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். இதேபோல குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

    இளையான்குடியில் ரூ. 30 லட்சம் கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    சிவகங்கை:

    மதுரையைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (28). இவர், தனது நண்பர்களுடன் 15 சதவீத கமி‌ஷன் முறையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக புதிய 2 ஆயிரம் நோட்டுகள் ரூ. 30 லட்சத்துடன் ஒரு காரில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு கடந்த 15-ந் தேதி சென்றார்.

    அப்போது 2 கார்களில் வந்த 19 பேர் கொண்ட கும்பல் இவர்களை தாக்கி ரூ. 30 லட்சத்தை பறித்துச்சென்றது.

    இது தொடர்பாக இளையான்குடி போலீசார் சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.

    இந்த கொள்ளையில் தொடர்புடைய நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (20), முருகன் என்ற வேல்முருகன் (24), சுந்தர் (24), செல்வம் (23), சரவணன் என்ற சிவசரவணன் (33), ஆறுமுககுமார் (25) ஆகிய 6 பேர் தாழையூத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இளையான்குடி போலீசார் அங்கு சென்று 6 பேரையும் கைது செய்தனர். இதில் ஆறுமுககுமார், தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய போலீஸ்காரர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகங்கையில் இன்று காலை தி.மு.க. பிரமுகரை காரில் வந்த 10 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் சரவணராஜன் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தி.மு.க. 3-வது வார்டு பிரதிநிதியாகவும் உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இன்று காலை தனது 2 குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக சரவணராஜன் காரில் சென்றுள்ளார். மதுரை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளை விட்டு, விட்டு அவர் வீட்டிற்கு புறப்பட்டார்.

    அந்த பகுதியில் சிறிது தூரம் வந்த போது, கார் மீது ஒரு கல் விழுந்துள்ளது. இதனால் காரை நிறுத்திய சரவணராஜன் கீழே இறங்கி பார்த்தார்.

    அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 10 பேர் கும்பல் சரவண ராஜனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது.

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் சுதாரித்த மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணராஜனை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கபட்டபோது, 3-வது வார்டில் போட்டியிட தி.மு.க. சார்பில் சரவண ராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இது சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் தேர்தல் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்குயில் ரூ. 30 லட்சம் கொள்ளைபோன வழக்கில் போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.




    சிவகங்கை:

    மதுரையைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (28). இவர், தனது நண்பர்களுடன் 15 சதவீத கமி‌ஷன் முறையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக புதிய 2 ஆயிரம் நோட்டுகள் ரூ. 30 லட்சத்துடன் ஒரு காரில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு கடந்த 15-ந் தேதி சென்றார்.

    அப்போது 2 கார்களில் வந்த 19 பேர் கொண்ட கும்பல் இவர்களை தாக்கி ரூ. 30 லட்சத்தை பறித்துச்சென்றது.

    இது தொடர்பாக இளையான்குடி போலீசார் சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.

    இந்த கொள்ளையில் தொடர்புடைய நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (20), முருகன் என்ற வேல்முருகன் (24), சுந்தர் (24), செல்வம் (23), சரவணன் என்ற சிவசரவணன் (33), ஆறுமுககுமார் (25) ஆகிய 6 பேர் தாழையூத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இளையான்குடி போலீசார் அங்கு சென்று 6 பேரையும் கைது செய்தனர். இதில் ஆறுமுககுமார், தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய போலீஸ்காரர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு கூறினார்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் முத்துமாரியம்மன் - மாசாணியம்மன் கோவிலை சாமியார் நாகராணி, பூசாரி மாரிமுத்து ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் நாகராணி முள் படுக்கையில் அருள்வாக்கு கூறுவது வழக்கம். இந்த ஆண்டில் கடந்த கார்த்திகை 1-ந் தேதி அவர், காப்பு கட்டி விரதம் தொடங்கினார்.

    48-வது நாளான நேற்று கோவில் வாசலில் கருவேல முள் உள்பட பல்வேறு முட்களால் 8 அடி உயரம், 10 அடி அகலத்துக்கு படுக்கை அமைக்கப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்னர், அருள் வந்து ஆடிய பெண் சாமியார் முள் படுக்கையில் 3 மணி நேரம் படுத்து தவம் செய்தார். பின்னர் முள் படுக்கையில் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
    பிள்ளையார்பட்டி அருகே இன்று அதிகாலை குளத்தில் தவறி விழுந்து சாப்ட்வேர் என்ஜினீயர் பலியானார்.
    காரைக்குடி:

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது25). இவர் பி.இ. முடித்து விட்டு சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    பாலாஜி அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை போட்டு இருந்தார். அதன்பேரில் இவருடன் 16 பேர் கொண்ட குழுவினர் சபரிமலைக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் குருவாயூர், பவானி, மருதமலை போன்ற இடங்களுக்கு சென்று விட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டிக்கு வந்து தங்கினார்கள்.

    இதில் பாலாஜி மட்டும் இன்று அதிகாலை பிள்ளையார்பட்டி அருகே உள்ள ஒரு குளக்கரை பகுதியில் காலைக்கடனை கழிக்க சென்றார்.

    தண்ணீரை ஒட்டியுள்ள பாறையில் இருந்தபடி கால் கழுவியபோது, திடீரென்று பாறை வழுக்கியது. இதில் பாலாஜி ஆழமான பகுதியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரி சோதனைக்காக பாலாஜி யின் உடல் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருப்புவனம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை வாலிபர்கள் அரிவாளால் வெட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்புவனம்:

    திருப்புவனத்தில் இருந்து பூவந்தி செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலைநகர். இப்பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரதாஸ்(வயது 52). என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயபாலா(47). மகன் செருபா பெல் ஜெயசீலன்(22), சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் பாஸ்கரதாஸ் தனது மனைவி, மகனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இவர்களது வீட்டிற்கு 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    பின்னர் அந்த நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து என்ஜினீயர் பாஸ்கரதாஸ், மனைவி விஜயபாலா, மகன் ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த 3 பேரும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருப்பத்தூர்,

    திருப்பத்தூரில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், வருகிற பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர் நெடுமறம் இளங்கோ தலைமை தாங்கினார்.

    பெரியய்யா முன்னிலை வகித்தார். முன்னதாக ஆறுமுகம் சேதுராமன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி மாநில செயலாளர் மாறன், வழக்கறிஞர் பிரிவு எழிலரசு, தேசிய ஒருகிணைப்பாளர் இமயம் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தேவாரம்பூர் ஆறுமுகம், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கல்பனா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நெடுமறம் இளங்கோ கூறும்போது, தமிழனின் அடையாளமாகவும், பாரம்பரிய வீர விளையாட்டாகவும் கருதப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரியம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றது.

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்திருத்தினை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். முடிவில் யாசின் நன்றி கூறினார்.
    வார்தா புயலால் பாதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இடைக்கால நிவாரணம் அறிவிக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை இல்லமல் வறட்சி நிலவுகிறது விவசாயம் பொய்த்து, விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

    டெல்டா பகுதிகளிலும் மழை இல்லாமல் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதையும் வறட்சி மாநிலமாக அறிவித்து, மத்திய அரசு உடனே இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வார்தா புயலால் சென்னை பாதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் மத்திய அரசு இப்போதுதான் குழுவை அனுப்பி வைத்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்ட உடன் மத்திய அரசு உடனடியாக இடைக்கால நிவாரணமாக பெருந்தொகையை கொடுத்து, அதன்பின் குழுவை அனுப்பி பாதிப்பை கணக்கிட்டு மேற்கொண்டு தொகையை வழங்கும். ஆனால் தற்போது உள்ள மத்திய அரசு இடைக்கால நிவாரணத்தை வழங்கவில்லை. உடனடியாக குழுவை அனுப்பாமல் காலம் கடந்து அனுப்பியுள்ளது.

    எனவே உடனடியாக தமிழகத்துக்கு இடைக்கால நிவாரண தொகையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    ரூ. 1000, ரூ. 500 செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு தொழில்கள் முற்றிலும் நின்றுவிட்டது. காளையார் கோவிலில் உள்ள தேசிய பஞ்சாலை 30 நாட்களாக மூடிக்கிடக்கிறது. ரூ. 15 கோடி மதிப்புள்ள நூல்கள் தேங்கியுள்ளன. 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய ஜவுளித் துறை செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

    நாட்டில் தற்போது காய்கறிகள், பழங்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பேரிழப்பை சந்தித்து வருகின்றனர். நெல் சாகுபடி செய்யாத காலங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை பயிரிட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி வந்தவர்களுக்கு தற்போது அந்த வழியும் இல்லை.

    நாட்டில் பண நீக்க மதிப்பு அறிவிப்புக்கு முன்பு ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருந்தது. மோடி பண நீக்க அறிவிப்பு செய்தால் கருப்பு பணம் ரூ. 5 லட்சம் கோடி வராது என்று எண்ணினார். ஆனால் எனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்திப்படி தற்போது வரை ரூ. 14 லட்சத்து 32 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு வந்துள்ளது. மீதமுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் இன்னும் 3 நாட்களுக்குள் வங்கிகளுக்கு வந்துவிடும்.

    ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சிலரை திருப்திப்படுத்தத்தான் இந்த திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

    உதாரணமாக ஒருவர் 100 ரூபாயை ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும்போது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ரூ. 1.50 கமி‌ஷன் கிடைக்கிறது. அந்த 100 ரூபாய், 10 பேர் மாற்றும்போது, அந்த நிறுவனத்துக்கு 15 ரூபாய் கமி‌ஷன் கிடைக்கும்.

    24 மணி நேரமும் மின்சாரமும், இன்டர்நெட் வசதியும் இருக்கிற நாட்டில்கூட ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை முழு அளவில் இல்லை. ஜெர்மனி, ஆஸ்திரியாவில் 80 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 60 சதவீதமும், பிரான்சில் 56 சதவீதமும், அமெரிக்காவில் 46 சதவீதமும் ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்து வருகிறது.

    எனவே நமது நாட்டில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை முழு அளவில் நடப்பதற்கு சாத்தியமில்லை. மத்திய அரசுக்கு சரியான புரிதல், திட்டமிடுதல் சிந்தனை கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கல்லல் அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து கடத்தப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்கள்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சவரகோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் வான்மதி (வயது22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோம சுந்தரம் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.

    இரு வீட்டார்களும் திருமணம் குறித்து பேசும் போது, ரூ.6 லட்சம் மற்றும் வரதட்சணையும், சீர்வரிசையும் செய்ய வேண்டும் என சோம சுந்தரம் வீட்டார் கேட்டனர். அதற்கு பெண் வீட்டார் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சோம சுந்தரத்திற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க நிச்சய தார்த்தம் நடைபெற இருப்பதாக வான்மதிக்கு தகவல் கிடைத்தது

    இதுபற்றி சோமசுந்தரத்திடம் வான்மதி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வான்மதியை சோமசுந்தரம் மற்றும் உறவினர்கள் அழகம்மாள், பரமானந்தம், நித்தியானந்தம், சோனியா ஆகிய 5 பேரும் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து வான்மதியின் தாய் பஞ்சவர்ணம் கல்லல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் வழக்குப்பதிவு செய்து அழகம்மாள், பரமானந்தம், நித்தியானந்தம், சோனியா ஆகிய 4 பேரையும் கைது செய்தார். தலைமறைவான சோமந்தரம் கடத்தப்பட்ட வான்மதியை தேடி வருகிறார்.

    ×