என் மலர்
செய்திகள்

மதுரை - சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் வறட்சியால் நெற்பயிர்கள் கருகின
மதுரை - சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் வறட்சியால் நெற்பயிர்கள் கருகின. பருவ மழை பொய்த்துபோனதால் குடிநீர் பிரச்சினையும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 8 தாலுகாக்கள் மற்றும் 445 ஊராட்சிகளை உடையது. நகரங்களை விட கிராமப்புறங்களே அதிகம். தமிழகத்திலேயே அதிக கண்மாய்கள், குளங்கள் அமைந்த மாவட்டம் ஆகும்.
மழையை நம்பித்தான் இம்மாவட்டம் உள்ளது. இதில் திருப்புவனம், மானாமதுரை தாலுகா மட்டும் வைகை பாசனத்தை நம்பி உள்ளது. வைகையிலும் வெள்ளம் வந்தால் மட்டுமே இப்பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும். மற்ற நாட்களில் மாவட்டத்திற்குரிய வைகை தண்ணீர் கிடைப்பதில்லை. விவசாயிகள் இதற்கான வரியை செலுத்துகிறார்கள். ஆனால் வைகை தண்ணீர் கிடைப்பதில்லை.
பெரியார் பாசனம் சிவகங்கை தாலுகாவில் ஒரு பகுதிக்கு மட்டும் வழங்கப்படுகிறது. தற்போது அதுவும் உரிய அளவு கிடைப்பதிலலை. எனவே மாவட்ட விவசாயிகள் பருவமழையை நம்பித்தான் உள்ளார்கள். வைகை, பெரியார் பாசன பகுதிகளில் இரண்டு முறை விவசாயம் நடக்கும. மற்ற பகுதிகளில் ஒருமுறை மட் டுமே விவசாயம் நடக்கும்.
தற்போது பருவ மழை போதிய அளவை விட மிகவும் குறைவாக பெய்ததால் ஒருபோக விவசாயம் கூட பயனற்றதாகி விட்டது. வறட்சி காரணமாக திருப்புவனம் தாலுகா இந்த ஆண்டு கடும் வறட்சியில் சிக்கி உள்ளது. திருப்புவனம் தாலுகாவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் விளையாமல் “சாவி”யாகி விட்டன.
தென்னை தொழிலுக்கு பெயர் போன திருப்புவனத்தில் மழை இல்லாததால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய் உள்ளன. மேலும் மாற்றாக வெற்றிலை பயிரிடுவார்கள். அதுவும் சரிவர இல்லை. மானா மதுரை தாலுகாவிலும் இதே நிலை நீடிக்கிறது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விட்டது. இளையான்குடி பகுதியில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருசில இடங்களில் மாடுகளுக்கு தீவனத்திற்காக “சாவி”யான நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படுவது பரிதாபமாக உள்ளது. தொடர்ந்து மூன்று முறை நெற்பயிர்கள் கருகி விட்டது. இதற்கு மாற்று பயிராக மிளகாய், எள் போன்றவற்றை பயிரிட்டும் போதிய மழை இல்லாததால் அதுவும் கருகி விட்டது.
தமிழகத்திலேயே இளையான்குடி பகுதி மிளகாய்க்கு பெயர் பெற்றதாகும். ஆனால் இந்த ஆண்டு அந்த பயிர்களும் கருகி விட்டது. காரைக்குடி, கல்லல், தேவகோட்டை, கன்னங்குடி, சாக்கோட்டை ஆகிய பகுதிகளில் 80 சதவீத நெற்பயிர்கள் கருகி விட்டது.
மழை இல்லாததால் கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இல்லை. போர்வெல் கிணறுகள் மூலமாக போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கால்நடைகள் தீவனத்திற்கும், குடிப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் அரசு இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காவிடில், விவசாயிகளின் வாழ்க்கை நிலை மிகவும் கேள்விக் குறியாகி விடும்.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை வைகை நீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வைகை வறண்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது.
திருமங்கலம், மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி உள்பட பல பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, பூ வகைகள் மற்றும் சிறு தானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படும் பகுதியாகும்.
இதில் பல இடங்களில் பருவ மழையை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு உள்பட பல பண பயிர்களை பயிரிட்டு இருந்தனர். வளர்ந்து வந்த நிலையில் பருவ மழை பொய்த்ததால் கருக தொடங்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதம் அடைந்தது. மதுரை மாவட்டத்தில் 85 சதவீதம் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் வறட்சி காரணமாக இந்த ஆண்டு சம்பா சாகுபடி 6 ஆயிரத்து 82 ஹெக்டேர் நிலம் மட் டுமே சாகுபடி நடக்கிறது. இதில் 85 சதவீதம நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது. வறட்சியால் நெல் நடவு பணி முற்றிலும் பாதித்து உள்ளது.
சிறு தானியங்களை பொறுத்தவரை இந்தாண்டு 26 ஆயிரம் ஹெக்டேருக்கு பதில் 23 ஆயிரத்து 732 ஹெக்டேரிலும், எண்ணை வித்து பயிர்கள் 9 ஆயிரத்து 930 ஹெக்டேருக்கு பதில் 1652 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது. இதேபோல பருத்தி, கரும்பும் குறைந்த அளவு நிலபரப்பிலேயே பயிரிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சராசரியாக பருவ மழை 145 மி.மீ. அளவில் இருக்க வேண்டும். ஆனால் இந்தாண்டு வெறும் 12.36 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளதால் விவசாயம் மட்டும் அல்ல குடிநீர் பிரச்சினையும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதால் பொதுமக்களும் பீதியில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தை இந்த ஆண்டு வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்படைந்துள்ளது. வடகிழக்கு, தென் மேற்கு பருவ மழைகள் மட்டுமின்றி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் மழையும் இந்த மாவட்டத்தை வஞ்சித்து விட்டது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 7 அணைகளும், 990 கண்மாய்களும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் இல்லாததால் கிணறுகள் வறண்டுள்ளன. இதனால் மக்கள் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவலம் உள்ளது. ஒரு குடம் தண்ணீர் 7 முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மழை பொய்த்ததன் காரணமாக மாவட்டத்தில் 3¼ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி பயிர்கள் கருகி விட்டன. மக்காச்சோளம், நெல், குதிரைவாலி, கரும்பு, வாழை, பருத்தி போன்றவை மண்ணில் சாய்ந்து விட்டன.
இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். கருகிய பயிர்களுடன் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பலமுறை விவசாயிகள் வந்து கண்ணீர் வடித்தனர். காத்திருப்பு போராட்டம் நடத்த சென்றபோது, போலீ சாரால் கைது செய்யப்பட்டனர்.
பக்கத்து மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்தபோது கூட, விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் இயல்பாக பெய்யும் மழையைவிட 150 மி.மீ. குறைவாகவே பெய்துள்ளது. மொத்தத்தில் விருதுநகர் மாவட்டம் மழை மறைவு பிரதேசமாகி விட்டது என்கின்றனர் அங்குள்ள விவசாயிகள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கமாக 458 மி.மீ. அளவில் பெய்ய வேண்டிய மழை இந்தாண்டு வெறும் 170 மி.மீ. அளவே பெய்துள்ளதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 1840 கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டே காணப்படுகிறது. பருவமழையை நம்பி சுமார் 1 லட்சத்து 19 ஆயிரத்து 886 ஹெக்டேர் நிலபரப்பில் நெல் பயிர் பயிடப்பட்டு இருந்தது போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது.
இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இந்த வறட்சியால் 2 விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். இதேபோல குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

Next Story