என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் காரைக்குடியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு சோமன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா உள்பட 3 பேரையும் பெங்களூர் சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஆம் ஆத்மி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் சசிகலா உள்பட 3 பேரும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தங்களை தமிழக சிறைக்கு மாற்ற கோரி மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு மனு கொடுத்தால், நீதிபதி முதல் கட்டமாக சிறைத் துறை டி.ஜி.பி.யின் ஒப்புதலை கேட்கக்கூடும்.
அப்போது அவர்களை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெங்களூரில் உள்ள சிறையிலேயே வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை டி.ஜி.பி., நீதிபதிகளிடம் கொடுக்க வேண்டும். அப்போது சசிகலா உள்பட 3 பேரும் தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சபாநாயகர் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதால் தான் ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அங்கு ஜனநாயக படுகொலை நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற முடிந்தது. உண்மையில் வெற்றி பெற்றது எடப்பாடி பழனிச்சாமி இல்லை. தமிழக காவல்துறை தான். அந்தளவுக்கு துணை போனார்கள்.
தற்போது தமிழகத்தில் பினாமி அரசு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்சில் அடைத்து வைத்து, தமிழகத்தில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்தேறியுள்ளது. இதற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் நடந்து கொண்ட விதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா மேலச்சாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவரது மகள் பாலசுந்தரி (வயது 21). சிவகங்கை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்தவர் மகாராஜா (24). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, ஊருக்கு வந்துள்ளார். இவர், பாலசுந்தரியை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த கல்லூரி மாணவி, அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து தற் கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து பாலசுந்தரி சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மகாராஜா மற்றும் அவரது நண்பர்களான கணேசன், ராமச்சந்திரன் (25), ரஜினி (29), விசு (25) ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், மகாராஜா, ரஜினி இருவரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதேபோன்று சிவகங்கை தாலுகா பொன்னாகுளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு அதே ஊரை சேர்ந்த செந்தில்முருகன் (27) என்பவர் காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுபற்றி அந்த மாணவி, சிவகங்கை போலீஸ் டி.எஸ்.பி. மங்களேசுவரனிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்முருகனை கைது செய்தனர்.
இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்தவர் இருளையா (வயது 45). அ.தி.மு.க.வில் மாவட்ட இலக்கிய அணி செயலாளராக உள்ளார். இவர், காரைக்குடி துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட ‘சீட்’ கேட்டேன். இதற்கு அப்போதைய சிவகங்கை மண்டல அ.தி.மு.க. பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், ரூ. 50 லட்சம் கேட்டார். அவர் கூறியதையடுத்து கடந்த 25.03.2016 அன்று நத்தம் விசுவநாதனின் உதவியாளரிடம் ரூ. 50 லட்சம் கொடுத்தேன்.
ஆனால் அந்த தேர்தலில் எனக்கு ‘சீட்‘ கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, பணத்தை திருப்பி கேட்டபோது கடந்த டிசம்பர் 5-ந்தேதி, நத்தம் விசுவநாதன் ரூ. 15 லட்சம் கொடுத்தார்.
அதன்பிறகு மீதி பணம் ரூ. 35 லட்சத்தை கேட்டபோது, நான் தற்போது அந்த கட்சியில் இல்லை. இப்போது என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனக்கூறி பணத்தை தர மறுக்கிறார். இதனால் நான் மோசடி செய்யப்பட்டதாக உணர்கிறேன். எனவே நத்தம் விசுவநாதனிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்புவனம் தாலுகா ஏ.வெள்ளக்கரையை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அழகர்சாமி (வயது 21). இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அழகர்சாமி, தந்தையை கம்பால் தாக்கி காயப்படுத்தினார். காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து பாண்டி மனைவி முத்து இருளாயி (48), திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், அழகர் சாமி மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா நாட்டரசன் கோட்டை விலக்கு ரோட்டில், கரும்பு சக்கைகள் ஏற்றி வந்த ஒரு லாரி, இன்று காலை அங்குள்ள பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு மெயின்ரோட்டில் திரும்பியது.
அப்போது அந்த வழியாக 10-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த மினிவேன் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் வேனின் கதவு இடி பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக தொண்டி- மதுரை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி பகுதியை சேர்ந்தவர் சசி. இவரது மனைவி காஞ்சனா (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். மகன் 10-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில், கணவர் சசிக்கும், காஞ்சனாவுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
தகராறில் சசி மனைவியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த காஞ்சனா பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவர், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனா உயிரிழந்தார்.
இதுகுறித்து கந்திலி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை தாலுகா இடையமேலூரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் தற்போது சிவகங்கை பாரதியார் நகரில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு தனக்கு சொந்தமான ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வீட்டுமுன்பு முருகன் நிறுத்தியிருந்தார். அதனை சிலர் திருட முயற்சித்துள்ளனர்.
இந்த சத்தம் கேட்டு முருகன், வீட்டிற்கு வெளியே வந்தபோது 5 பேர் சைக்கிளை திருட முயற்சிப்பது தெரியவந்தது. அவர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்களாம்.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்களை கண்டதும் 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் 4 பேரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். ஒருவன் மட்டும் தப்பி ஓடிவிட்டான்.
இதனைத் தொடர்ந்து பிடிபட்ட 4 பேரும், சிவகங்கை டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் மோகன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார். இதில் அவர்களது பெயர் வீரவலசை பிரபு (38). கந்தசாமி (37), மணிகண்டன் (28), அய்யப்பன் (24) என்பதும் தப்பி ஓடியவன் பெயர் ராஜசேகர் என்பதும் தெரியவந்தது. மேலும் பிரபு, அய்யப்பன் ஆகியோர் பிரபல ரவுடிகள் என்பதும் அவர்கள் மீது பல வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
காளையார் கோவில் அருகே உள்ள ஒத்தப்புஞ்சை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் வயிறு வீக்கமாக இருந்ததால் அவருக்கு கட்டி இருக்கலாம் என கருதிய பெற்றோர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற னர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது பிராணி கிராமத்தை சேர்ந்த செந்தில் (25) என்பவர் கட்டிட வேலைக்காக ஒத்தப்புஞ்சை கிராமம் வந்த போது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாக சிறுமி தெரிவித்தார்.
அவர் திருமணம் செய்வதாக கூறியதால் நெருங்கி பழகியதில் கர்ப்பம் அடைந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து, ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக கட்டிட தொழிலாளி செந்திலை கைது செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரிடம் அந்த துறையின் தலைவர் பேராசிரியர் அருணாசலம், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு மாணவிக்கு மன உளைச்சல் கொடுத்துள்ளார். இதே போல் வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த மாணவி, தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் அருணாசலம் மீது பெண் வன்கொடுமை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அருணாசலத்தை பணியிடை நீக்கம் செய்து அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் அவுசிங் போர்டு பகுதி-2ல் வசிப்பவர் சிவா. இவரது மனைவி கோமதி. குடியாத்தம் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சத்திய குமார் (வயது 25).
டிப்ளமோ படித்துவிட்டு, டி.என்.பி.எஸ். சி. உள்ளிட்ட தேர்வுகளை எழுதி அரசு பணிக்காக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் குமார், ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணிடம் தனது காதலை நேற்று முன்தினம் காதலர் தினத்தன்று குமார் மனம்விட்டு வெளிப்படுத்தியதாக தெரிகிறது. காதலை அந்தப்பெண் ஏற்க மறுத்து உள்ளார்.
காதலில் தோல்வி ஏற்பட்டதால் குமார் மனம் வருந்தி காணப்பட்டார். காதலர் தினத்தன்று இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலையில் தூங்கி எழுந்த பெற்றோர், மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்து போயினர். கத்தி கூச்சலிட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து கந்திலி போலீசில், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர் அவுசிங் போர்டு பகுதி-2ல் வசிப்பவர் சிவா. இவரது மனைவி கோமதி. குடியாத்தம் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சத்திய குமார் (வயது 25).
டிப்ளமோ படித்துவிட்டு, டி.என்.பி.எஸ். சி. உள்ளிட்ட தேர்வுகளை எழுதி அரசு பணிக்காக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் குமார், ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணிடம் தனது காதலை நேற்று முன்தினம் காதலர் தினத்தன்று குமார் மனம்விட்டு வெளிப்படுத்தியதாக தெரிகிறது. காதலை அந்தப்பெண் ஏற்க மறுத்து உள்ளார்.
காதலில் தோல்வி ஏற்பட்டதால் குமார் மனம் வருந்தி காணப்பட்டார். காதலர் தினத்தன்று இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலையில் தூங்கி எழுந்த பெற்றோர், மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்து போயினர். கத்தி கூச்சலிட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து கந்திலி போலீசில், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






