என் மலர்
செய்திகள்

திருப்பத்தூரில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
திருப்பத்தூரில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அவுசிங் போர்டு பகுதி-2ல் வசிப்பவர் சிவா. இவரது மனைவி கோமதி. குடியாத்தம் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சத்திய குமார் (வயது 25).
டிப்ளமோ படித்துவிட்டு, டி.என்.பி.எஸ். சி. உள்ளிட்ட தேர்வுகளை எழுதி அரசு பணிக்காக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் குமார், ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணிடம் தனது காதலை நேற்று முன்தினம் காதலர் தினத்தன்று குமார் மனம்விட்டு வெளிப்படுத்தியதாக தெரிகிறது. காதலை அந்தப்பெண் ஏற்க மறுத்து உள்ளார்.
காதலில் தோல்வி ஏற்பட்டதால் குமார் மனம் வருந்தி காணப்பட்டார். காதலர் தினத்தன்று இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலையில் தூங்கி எழுந்த பெற்றோர், மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்து போயினர். கத்தி கூச்சலிட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து கந்திலி போலீசில், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story