என் மலர்
செய்திகள்

காளையார்கோவில் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
காளையார் கோவில் அருகே உள்ள ஒத்தப்புஞ்சை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் வயிறு வீக்கமாக இருந்ததால் அவருக்கு கட்டி இருக்கலாம் என கருதிய பெற்றோர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற னர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது பிராணி கிராமத்தை சேர்ந்த செந்தில் (25) என்பவர் கட்டிட வேலைக்காக ஒத்தப்புஞ்சை கிராமம் வந்த போது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாக சிறுமி தெரிவித்தார்.
அவர் திருமணம் செய்வதாக கூறியதால் நெருங்கி பழகியதில் கர்ப்பம் அடைந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து, ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக கட்டிட தொழிலாளி செந்திலை கைது செய்தார்.

Next Story