என் மலர்
செய்திகள்

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அனுமதிக்கக்கூடாது: கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஆம்ஆத்மி கடிதம்
காரைக்குடி:
சிவகங்கை மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் காரைக்குடியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு சோமன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா உள்பட 3 பேரையும் பெங்களூர் சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஆம் ஆத்மி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் சசிகலா உள்பட 3 பேரும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தங்களை தமிழக சிறைக்கு மாற்ற கோரி மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு மனு கொடுத்தால், நீதிபதி முதல் கட்டமாக சிறைத் துறை டி.ஜி.பி.யின் ஒப்புதலை கேட்கக்கூடும்.
அப்போது அவர்களை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெங்களூரில் உள்ள சிறையிலேயே வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை டி.ஜி.பி., நீதிபதிகளிடம் கொடுக்க வேண்டும். அப்போது சசிகலா உள்பட 3 பேரும் தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.






