என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடி அருகே வங்கி பெண் ஊழியர் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள புதுவலசையை சேர்ந்தவர் ராமையா. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் ஐஸ்வர்யா வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஐஸ்வர்யாவை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ராமையா சாக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
    பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் டி.புதூரை சேர்ந்தவர் கண்ணாத்தாள் (வயது 55). இவரை உறவினர் கார்த்திகேயன் கேலி செய்தாராம்.

    இதுகுறித்து தனது மகன்கள் மணிகண்டன் (39), ஸ்ரீதர் (32), மோகன்ராஜ் (36), ஆகியோரிடம் கண்ணத்தாள் கூறியுள்ளார். அதன் பேரில் 3 பேரும் கார்த்தி கேயன் வீட்டிற்கு சென்று கேட்க சென்றனர்.

    அப்போது அங்கு அவர் இல்லை. இதனால் அங்கிருந்த ஜெயச்சந்திரன் (35) என்பவரிடம் இதுபற்றி கேட்டனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

    சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து கம்பால் ஜெயச்சந்திரனை தாக்கினர். அப்போது அங்கு கார்த்திகேயன் வர, அவருக்கும் அடி- உதை விழுந்தது.

    இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதில் தன்னை தாக்கியவர்கள் தான் அணிதிருந்த நகையை பறித்து சென்றுவிட்டனர். என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து சப்-இன்ஸ் பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தார்.

    இதற்கிடையில் மோகன்ராஜ் ஒரு புகார் கொடுத்தார். அதன் பேரில் எதிர்தரப்பை சேர்ந்த கார்த்திகேயன், சங்கர், சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் டி.புதூரை சேர்ந்தவர் கண்ணாத்தாள் (வயது 55). இவரை உறவினர் கார்த்திகேயன் கேலி செய்தாராம். இதுகுறித்து தனது மகன்கள் மணிகண்டன் (39), ஸ்ரீதர் (32), மோகன் ராஜ் (36), ஆகியோரிடம் கண்ணத்தாள் கூறியுள்ளார். அதன் பேரில் 3 பேரும் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கேட்க சென்றனர்.

    அப்போது அங்கு அவர் இல்லை. இதனால் அங்கிருந்த ஜெயச்சந்திரன் (35) என்பவரிடம் இது பற்றி கேட்டனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

    சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து கம்பால் ஜெயச்சந்திரனை தாக்கினர். அப்போது அங்கு கார்த்திகேயன் வர, அவருக்கும் அடி- உதை விழுந்தது.

    இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதில் தன்னை தாக்கியவர்கள் தான் அணிதிருந்த நகையை பறித்து சென்றுவிட்டனர். என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தார்.

    இதற்கிடையில் மோகன் ராஜ் ஒரு புகார் கொடுத்தார். அதன் பேரில் எதிர்தரப்பை சேர்ந்த கார்த்திகேயன், சங்கர், சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கஞ்சாவிற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான 5¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    சிவகங்கை:

    காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் செங்கை ஊரணி பகுதியில் வந்தபோது 2 பெண்கள் உள்பட 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசார் சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் பாண்டியம்மாள் (வயது 45), பானுமதி (36), பாலச்சந்தர் என தெரியவந்தது.

    கைதான 3 பேரிடம் இருந்து 5¼ கிலோ கஞ்சா மற்றும் ரூ. 3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்தமதிப்பு ரூ.55 ஆயிரத்து 250 ஆகும்.

    சிவகங்கை அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவர் பேசாததால் மனமுடைந்த இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி பாலா (28). கணேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 6 மாதமாக கணேஷ் வெளிநாட்டில் இருந்து போனில் பேசவில்லை என்று பாலா மனவேதனையுடன் காணப்பட்டார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பாலாவின் தந்தை முனியாண்டி சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தாய் தற்கொலை செய்து கொண்டதால் 3 வயது குழந்தை பரிதவிப்புடன் காணப்பட்டது.

    திருப்பத்தூர் அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (80). இவர் தனது மகள் வீட்டுக்கு செல்ல வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.

    இந்தநிலையில் நேற்று அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த லெட்சுமணன் நெற்குப்பை போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகராஜன் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது.

    சிவகங்கை:

    தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கக்கோரி தினந்தோறும் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.

    சிவகங்கை நகரிலும் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை என புகார் எழுந்தது. இதை கண்டித்தும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரியும் சிவகங்கை மாவட்டம் ஓ.பி.எஸ். பிரிவை சேர்ந்த அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை பஸ் நிலையம் அருகே திரண்டனர்.

    பின்னர் அவர்கள் திடீரென பஸ் நிலையம் முன் புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி கூறியதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாயமங்கலத்தில் கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    திண்டுக்கல் கே.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் ஹரிபாபு (வயது36). இவரது தம்பி சுப்பிரமணி (30), ஆட்டோ டிரைவர்.

    நேற்று சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    நேற்று மாலை சுப்பிரமணி கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் சுப்பிரமணி தண்ணீ ரில் மூழ்கி இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடம் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஹரிபாபு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊரக உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் 2016–17 நடப்பாண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.61 கோடி அளவில் செயல்படுத்தப்படும் ஊரக உள்கட்டமைப்பு திட்டப்பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் கூறியதாவது:–

    நபார்டு வங்கியின் ஆர்.ஐ.டி.எப். திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராமம் மற்றும் நகர்ப்புற சாலை பணிகள், பாலங்கள், தடுப்பணைகள், ஆதிதிராவிட மாணவ–மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், விவசாயிகளுக்கான பயிர் கிடங்குகள், பள்ளி வகுப்பறைகள் மற்றும் அறிவியல் சோதனைகள் செய்யும் அறைகள், கால்நடை மருத்துவமனைகள் ஆகிய பணிகளில் அந்தந்த அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    அனைத்து துறை கோட்ட பொறியாளர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நபார்டு திட்டத்தில் சுற்றுலா தலங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கும் முன்னுரிமை அளித்து அந்தந்த பணிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் டாக்டர் பங்காருகிரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) வானதி, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பல துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    வக்கீல் கொலையில் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் வக்கீல் பில்லப்பன் (வயது 48). இவருக்கு கவுரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பல்வேறு கொலை வழக்கு தொடர்பாக பில்லப்பன் ஆஜராகி வாதாடி வந்தார்.

    நேற்று மதியம் பில்லப்பன் திடீரென மாயமானார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பில்லப்பன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தணிகைவேல், துணை சூப்பிரண்டு மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பில்லப்பன், இறந்த வீடு, கைதாகி சிறையில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது ஆகும்.

    கொலை குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்திரவின்பேரில் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று உள்ளனர்.

    பில்லப்பன் பல கொலை வழக்குகளில் ஆஜராகி ஜாமின் பெற்று கொடுத்துள்ளனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் முன் விரோதத்தில் கொலை செய்தனரா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக காளையார்கோவிலைச் சேர்ந்த அய்யப்பன், மகேஷ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடியில் கோவில் திருவிழாவில் நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15-ந் தேதி திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காரைக்குடி ஆறுமுக நகரை சேர்ந்த செந்தில் மனைவி கிருஷ்ணவேணி (வயது 52) திருவிழாவுக்கு வந்திருந்தார். ஒரு இடத்தில் அன்னதானம் பெறுவதற் காக அவர் கூட்ட நெரிசலில் வரிசையில் நின்றிருந்தார். அப்போது 2 பெண்கள், கிருஷ்ணவேணி கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை நைசாக பறித்து கொண்டு தப்பினர்.

    காரைக்குடி அருகே உள்ள நடராஜர்புரத்தை சேர்ந்த வீரபாண்டி மனைவி சுந்தரம் (80) என்பவரும் திருவிழாவுக்கு வந்தபோது, மர்ம பெண்கள், அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை நைசாக பறித்து கொண்டு தப்பினர்.

    இந்த சம்பவங்கள் குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    முத்துமாரியம்மன் திருவிழாவில் இதுபோல் ஏராளமான பெண்கள் நகையை திருடர்களிடம் பறி கொடுத்ததாக கூறப் படுகிறது. சுமார் 50 பவுன் நகைகள் கொள்ளை போய் உள்ளது.

    ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தில் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டும் இதே திருவிழாவில் ஏராளமான பெண்களிடம் நகை திருடு போனது. இந்த ஆண்டு திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பத்தூர் தொழிலதிபர் கொலையில் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). தொழிலதிபர். இவரை, கடந்த 11-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி மெயின் ரோடு ரெயில்வே மேம்பாலம் வேலன் நகர் அருகே 4 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

    கொலையுண்ட வெங்கடேசன், இருமத்தூர் உள்ள தனியார் பள்ளி பங்கு தாரராக இருந்தார். அந்த பள்ளியின் தாளாளராக இருந்த அன்பு கொலையில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வெங்கடேசன், சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

    எனவே, அன்பு கொலைக்கு பழிக்கு பழியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேக்கிறார்கள். இது சம்பந்தமாக, அன்புவின் மகன்கள் ஆகாஷ், அஜயை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், வெங்கடேசன் கொலையில் திருப்பத்தூர் அவ்வை நகரை சேர்ந்த பிரபல ரவுடி ராஜன் (30) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ரவுடி ராஜனின் கூட்டாளி நவீனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து, நவீன் கொடுத்த தகவலின் பேரில், பெங்களூரில் பதுங்கி இருந்த மற்றொரு கூட்டாளியான பாபுவை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கந்திலி போலீஸ் நிலையத்துக்கு பாபு அழைத்து வரப்பட்டார்.

    இதற்கிடையே, ரவுடி ராஜனின் மற்ற கூட்டாளிகளையும் போலீசார் நெருங்கினர். ரவுடியின் கூட்டாளிகள் மேலும் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பணம் வாங்கி கொண்டு கொலை செய்ததாக இதுவரை பிடிப்பட்ட 5 பேரும் தெரிவித்துள்ளனர். போலீசார் அவர்களை கைதுசெய்தனர்.

    இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சதாசிவம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் கொலைக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×