என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் இன்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்
    X

    சிவகங்கையில் இன்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது.

    சிவகங்கை:

    தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கக்கோரி தினந்தோறும் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.

    சிவகங்கை நகரிலும் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை என புகார் எழுந்தது. இதை கண்டித்தும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரியும் சிவகங்கை மாவட்டம் ஓ.பி.எஸ். பிரிவை சேர்ந்த அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை பஸ் நிலையம் அருகே திரண்டனர்.

    பின்னர் அவர்கள் திடீரென பஸ் நிலையம் முன் புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி கூறியதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×