search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் கோவில் திருவிழாவில் நகை திருட்டு
    X

    காரைக்குடியில் கோவில் திருவிழாவில் நகை திருட்டு

    காரைக்குடியில் கோவில் திருவிழாவில் நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15-ந் தேதி திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காரைக்குடி ஆறுமுக நகரை சேர்ந்த செந்தில் மனைவி கிருஷ்ணவேணி (வயது 52) திருவிழாவுக்கு வந்திருந்தார். ஒரு இடத்தில் அன்னதானம் பெறுவதற் காக அவர் கூட்ட நெரிசலில் வரிசையில் நின்றிருந்தார். அப்போது 2 பெண்கள், கிருஷ்ணவேணி கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை நைசாக பறித்து கொண்டு தப்பினர்.

    காரைக்குடி அருகே உள்ள நடராஜர்புரத்தை சேர்ந்த வீரபாண்டி மனைவி சுந்தரம் (80) என்பவரும் திருவிழாவுக்கு வந்தபோது, மர்ம பெண்கள், அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை நைசாக பறித்து கொண்டு தப்பினர்.

    இந்த சம்பவங்கள் குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    முத்துமாரியம்மன் திருவிழாவில் இதுபோல் ஏராளமான பெண்கள் நகையை திருடர்களிடம் பறி கொடுத்ததாக கூறப் படுகிறது. சுமார் 50 பவுன் நகைகள் கொள்ளை போய் உள்ளது.

    ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தில் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டும் இதே திருவிழாவில் ஏராளமான பெண்களிடம் நகை திருடு போனது. இந்த ஆண்டு திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×