search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்-கலெக்டர் தகவல்
    X

    வாக்காளர்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்-கலெக்டர் தகவல்

    • வாக்காளர்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஏதேனும் விடுதல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) /பேரூராட்சிகளின் செயல் அலுவலரிடம்மனுவாக அளிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் (ெபாறுப்பு) மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 30.4.2022 வரை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கு (1ஊராட்சி மன்ற தலைவர், 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 2 பேரூராட்சி வார்டு உறுப்பினர்) தற்செயல் நேரடித் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கா னவார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் நேற்று (17-ந் தேதி) வெளியிடப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் விடுதல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) /பேரூராட்சிகளின் செயல் அலுவலரிடம் மனுவாக அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியல் 2நகல்களை அங்கீகரி க்கப்பட்ட அரசி யல் கட்சிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியஅலு வலகங்கள்/மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக வருகிற 20-ந் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

    அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்களை ஒரு பக்கத்திற்கு ரூ.5 கட்டணமாக செலுத்தி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் /வட்டார வளர்ச்சி அலுவலர் / பேரூராட்சி செயல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×