search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் நாலு கோட்டை மணிகண்டன் பேசிய போது எடுத்த படம். 

    கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • சிவகங்கை கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி மன்றத்தலை வர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. 12 ஊராட்சி மன்றத்தலை வர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    மாவட்டத்தில் உபரி நிதிகளை உடனே ஊராட்சி பணிகளுக்கு கலெக்டர் ஒதுக்க வேண்டும். பஞ்சா யத்து ராஜ் சட்டம் 1994-ன்படி சிவகங்கை மாவட் டத்தில் கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலாளர் பணி நியமனம் செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்க நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும்.

    ஜல்ஜீவன் திட்டம் தொடர்பாக அந்தந்த கிராம ஊராட்சிகளில் ஒப்பந்த புள்ளிகள் கோராமல் ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்ப டுகிறது. இதனால் கிராம ஊராட்சியின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட தீர்மா னங்களை முதல் -அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப் பட்டது.

    Next Story
    ×