search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
    X

    மின்னணு வாக்குப்பதிவு எநதிரங்கள் சரிபார்க்கும பணியை கலெக்டர் ஆஷா அஜீத் பார்வையிட்டார்.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி

    • வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள பாது காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு சரி பார்க்கும் எந்திரங்கள் ஆகியவைகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை கலெக்டர் ஆஷா அஜித் அங்கீகரிக் கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்கு சரிபார்க்கும் எந்தி ரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரப்பெற்றுள்ளன.

    இந்த எந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய-மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 2670 பேலட் யூனிட், 1936 கன்ட்ரோல் யூனிட் 2088 வி.வி.பேட் எந்திரங்களில் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

    இப்பணியானது வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா தேவி, தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×