search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டம்
    X

    திருப்பத்தூர் ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டம்

    • திருப்பத்தூர் ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று சேர்மன் பதிலளித்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் அருள் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் பிரசாத் வரவேற்றார். உதவியாளர் மாணிக்கராஜ் செலவு கணக்கு அறிக்கை வாசித்தார்.

    கூட்டத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனா வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், சகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில், கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சம்பள தொகை போன்று ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் வழங்க இந்த மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து கவுன்சிலர் கருப்பையா பேசுகையில் ஆ.தெக்கூரில் இருந்து திருக்களம்பூர் செல்லும சாலை பல ஆண்டுகளாக சீரமைப்பு செய்யப் படாமல் இருந்து வருகிறது.

    இதனால் அவ்வழியே நாள்தோறும் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பள்ளி மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலை யில் இரு மாவட்ட எல்லையில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் தற்சமயம் புதிய தார் சாலை போடப்பட்டு விட்டது. எனவே சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உடனடியாக புதிய சாலை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கவுன்சிலர் கலைமகள் ரா மசாமி கூறுகையில், செண்பகபேட்டை பகுதி யில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் மாணவர் களுக்கென்று போதிய கழிவறை வசதி இல்லாமல் திறந்த வெளியிலும் காட்டுப்பகுதிக்கும் செல்ல வேண்டிய ஒரு அசாதார சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக புதிய கழிவறை கட்டிடத்தை கட்டித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து கவுன்சிலர் சகாதேவன் பேசுகையில் மேலையான் பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படாமல் பள்ளி மாணவ மாணவிகள் மரத்தடியில் பயிலும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே இடிக்கப்பட்ட பழைய கட்டிட இடத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட விரைந்து நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    கவுன்சிலர் களின் அனைத்து கோரி க்கை களுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று சேர்மன் பதிலளித்தார்.

    Next Story
    ×