என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானாமதுரை கோவிலில் தெப்ப உற்சவம்
    X

    மானாமதுரை கோவிலில் தெப்ப உற்சவம்

    • மானாமதுரை கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் மாசிமக விழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. இந்த கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு மாசிமக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மூலவர் அங்காள பரமேசுவரிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடந்த தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தார்.

    அதன்பின் கோவிலை வந்தடைந்த அம்மன் தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். தெப்பம் 3 முறை வலம் வந்தது. திரளான பக்தர்கள் தெப்பத்தில் வலம் வந்த அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×