என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாவிற்கு குதிரைகள் செய்யும் பணி மும்முரம்
    X

    கோவில் திருவிழாவிற்கு குதிரைகள் செய்யும் பணி மும்முரம்

    • மானாமதுரை பகுதியில் கோவில் திருவிழாவிற்கு குதிரைகள் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அதிக அளவில் மண்பாண்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு முழுவதும் மண்பாண்ட தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது அரசு சார்பில் புவிசார் குறியீடு கிடைத்து உள்ளதால் மானாமதுரை மண்பாண்ட பொருட்க ளுக்கு பொதுமக்களிடம் மவுசு கூடி உள்ளது. மண்பாண்ட பொருட்களில் சமைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என நம்பபடுவதால் தினமும் மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான மக்கள் உற்பத்தி விலைக்கு மண்பாண்ட பொருள்களை வாங்கி செல்கின்றனர். இங்கு சீசனுக்கு ஏற்ற மண்பாண்ட பொருட்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மானாமதுரை சுற்றி உள்ள கிராமங்களில் மழை வேண்டி விவசாயம் செழிக்க குதிரை எடுப்பு விழாக்கள் ஆடி, ஆவணி மாதத்தில் நடைபெறும். இந்த திருவிழாவிற்காக ஏராளமான குதிரை சிலை, அய்யனார், கருப்பு, அம்மன் மற்றும் குழந்தை பொம்மை சிலைகள் செய்யும் பணியில் மண்பாண்ட தொழி லாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு தயார் செய்யப்படும் குதிரை மற்றும் சுவாமி சிலைகளை திருவிழா நடைபெறும் முதல் நாள் மானாமதுரையில் இருந்து திருவிழா நடைபெறும் கிராமம் வரை வான வேடிக்கையுடன் ஊர் வலமாக செல்வார்கள். கிராமங்களில் நடைபெறும் கோவில் விழாவிற்காக தற்போது மானாமதுரை பகுதியில் குதிரைகள் சுவாமி சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது.

    Next Story
    ×