search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
    X

    அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    • அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை-மதுரை மாவட்ட எல்லையில் கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகள்உள்ளன. இங்கு தமிழக அரசின் தொல்லியல் துறைமூலம் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் முக்கிய திட்டமாக இங்கு கிடைத்த பொருட்களை கொண்டு பிரமாண்ட கட்டிடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் செட்டிநாடு கட்டிடகலையில் மிகப்பெரிய அகழ்வா ராய்ச்சி காப்பக அரங்கம், கல்மண்டபங்கள், கூடங்கள், குளம் போன்றவை கலை நயத்துடன் அமைக்கும் பணிநிறைவடைந்துள்ளது.

    இந்த பணிகளை இறுதி ஆய்வு செய்யும் பணி நடந்தது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கீழடியில் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு மார்ச் முதல் வாரத்தில் வருகை தருகிறார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    கீழடி அகழாய்வு பணியில் கிடைத்த தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப் படுத்துவதற்கு ஏதுவாகவும் அந்த பொருட்களை உலகத் தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ11.03கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டி டம் கட்டுமான பணிகள் நடந்தது.

    தமிழர்களின் சங்க கால தமிழர்களின் பெருமை களை பறைசாற்றுகின்ற வகையில் உலக அளவில் புகழ்பெற்றுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டிடத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் வளாகத்தில் நடை பெற்ற விவரம் தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்தார்.

    வருகிற மார்ச் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங் கெற்க உள்ளார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி கட்டிட மைய செயற பொறியாளர் மணிகண்டன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை கோட்டாச்சியர் சுகிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×