search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி
    X

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணி கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் நடந்தது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி

    • சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நடந்தது.
    • கலெக்டர் மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து, பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது.

    கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒன்றான வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடடுள்ளது.

    அதனடிப்படையில், 1,288 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியும், 17 வாக்குப்பதிவு எந்திரங்களும், 49 கட்டுப்பாட்டுக்கருவிகள் என மொத்தம் 1,354 எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த பணிகள் சிவகங்கை வட்டாட்சியார் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்வில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர்சுகிதா, வட்டாட்சியர்கள் தங்கமணி, ராஜா உட்பட அரசியல் கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×