என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பரிசு
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வரவேற்பு
- மானாமதுரை அருகே மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
- புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் உதவி ஆசிரியர்கள் வருகை தந்த பள்ளி நிர்வாக குழு தலைவர் சத்தியசீலன் செயலாளர் அன்பழகன் உறுப்பினர்கள் தங்கராசு சத்தியமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்றனர்.
புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். 5 வயது முடிந்த குழந்தைகளை முதல் வகுப்பில் சேர பெற்றோர்கள் அழைத்து வந்தனர். அவர்களை வரவேற்று குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல்களை சரிபார்த்து முதல் வகுப்பில் 26 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் அனை வருக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள், மாணவர்களுக்கான 23 வழிகாட்டி நெறி முறைகள் கொண்ட குறிப்பு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை தேவி 1 முதல் 5 வகுப்பு மாண வர்கள் 150 பேருக்கு மதிய உணவு சாப்பிடும் எவர்சில்வர் தட்டுகள் வழங்கி னார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






