search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய ஊட்டச்சத்து மாத விழா
    X

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள ஜெயங்கொண்டானில் நடந்த மருத்துவமுகாமில் அமைச்சர் பெரியகருப்பன், அரசு மருத்துவமனை, மற்றுதம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இருகண் நுண்ணோக்கினை வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உள்ளார்.

    தேசிய ஊட்டச்சத்து மாத விழா

    • சிவகங்கையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • மேலும் ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் உள்ள சமுதாயக்கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. இதையொட்டி விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன், கொடியசைத்து தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 1,552 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ைமயங்கள் மூலம் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட மொத்தம் 54 ஆயிரத்து 797 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த மையங்களில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடையவும், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேருவதையும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    1,500 நகர்ப்புற, ஊரக பகுதிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தரமான, நல்ல சத்தான உணவுகளை காலை மற்றும் மதிய வேலைகளில் கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளார். இதனை பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு முதல் 1,000 நாட்களுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து குறித்த தகவல் பலகையை துணை சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த செவிலியர்களுக்கு அமைச்சர் ெபரியகருப்பன் வழங்கினார். மேலும் ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

    இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பரமேஸ்வரி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சிங்கம்புணரி அருகே உள்ள உள்ள ெஜயங்கொண்டானில் நடந்த 24-வது மருத்துவமுகாமில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    Next Story
    ×