என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுகளை வாங்கி குவிக்கும் சிறுவனுக்கு அமைச்சர் பாராட்டு
- திருப்பத்தூர் அருகே நடந்த விழாவில் விருதுகளை வாங்கி குவிக்கும் சிறுவனுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
- இளம் பயிற்சியாளர் என்ற விருதை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சொக்க நாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 133 மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து 1330 திருக்குறளை சொல்லிக்கொண்டே கன சதுர தீர்க்கத்தில் தேசியக்கொடியை போல் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் சொக்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்-வளர்மதி ஆகியோரின் 6 வயது மகன் அபிமன்யு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்து விருதுகள் வாங்கியதை பாராட்டி அவருக்கு "இளம் பயிற்சியாளர்" என்ற விருதை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணன், துபாய் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






