search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு
    X

    காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் யோகா பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் செல்வபெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளார்.

    சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

    • சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்), சுதர்சனம் (மாதவரம்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோருடன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துறைகள் ரீதியாக களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன்,எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி (மானாமதுரை), சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி,துணைச் செயலாளர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

    காரைக்குடி வட்டத்தி ற்குட்பட்ட அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், காரைக்குடி ஆதிதிராவிடர் நலத்துறையின் அரசினர் மாணவிகள் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், காரைக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் இயற்கை மற்றும் யோகா பிரிவில் தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியமர்த்த வேண்டிய பிரிவின் பணியாளர்கள், மருந்துகளின் இருப்புகள் குறித்தும் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு மையம் மற்றும் அருங்காட்சியகப் பணிகளின் நிலை குறித்தும், பையூர் ஊராட்சியில், பழமலைநகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பித்தல் முறை மற்றும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெ ருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், சிறப்பான நிர்வாகத்தை வெளிப்ப டைத் தன்மையுடன் அரசு மேற்கொள்ளும் வகையில், இந்த குழு அடிப்படை யாக திகழ்கிறது. எங்களுக்கு அளிக்கப்படும் விவரங்கள் பரிசீலனை க்கு உட்படுத்தப்பட்டு, அரசிற்கு இந்த குழு வாயிலாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இந்த நிகழ்வின்போது, பல்வேறு துறைகள் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×