என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
    X

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசினார்.

    ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

    • கண்டனூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் நடந்தது.

    முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.கண்டனூர் பேரூராட்சி செயலாளர் சேகர் வரவேற்றார்.

    மாவட்ட செயலா ளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    வைகை செல்வன் பேசுகையில், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்கும் இயக்கம் அ.தி.மு.க.. இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த 3 நாட்களில் பீனிக்ஸ் பறவையாய் எழுச்சியோடு இங்கே கூடியுள்ளோம். தி.மு.க அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மாசான், சுப்பிரமணியன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நருவிழி கிருஷ்ணன், துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், காரைக்குடி நகர்மன்ற கவுன்சிலர்கள் ராம்குமார், அமுதா, கனகவள்ளி, ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.நகர தலைவர் அருள்ஜோதி நன்றி கூறினார்.

    Next Story
    ×