search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்கள் சரிவர இயங்காததால் மாணவ-மாணவிகள் கல்வி பாதிப்பு
    X

    அரசு பஸ்கள் சரிவர இயங்காததால் மாணவ-மாணவிகள் கல்வி பாதிப்பு

    • தேவகோட்டையில் அரசு பஸ்கள் சரிவர இயங்காததால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
    • பள்ளிக்கு செல்ல தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயில சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கிராமங்களில் இருந்து நகர் பஸ்கள் மட்டும் வாயிலாக வந்து செல்கின்றனர்.

    தேவகோட்டை பணி மனையில் சுமார் 27க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சரிவர பஸ்கள் இயக்கப்படாததால் பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.

    தேவகோட்டையில் இருந்து கோட்டூர் காரை வழியாக செல்லும் வெற்றியூர் நகரப் பேருந்து இயக்கப்படாததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூ ரிகளுக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பும் அவல நிலை உள்ளது. சிலர் சரக்கு வாகனங்களில் பள்ளிக்கு செல்கின்றனர். அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் பள்ளிக்கு தாமதமாக செல்வதும், இதனால் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

    நகர பேருந்துகள் தரம் குறைந்தும் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நிற்பதாலும் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பற்றாக் குறையாலும் நாளுக்கு நாள் நகரப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாமல் உள்ளது. நகர பேருந்துகளை மட்டும் நம்பி உள்ள கிராமங்களுக்கு செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் சரிவர இயக்கினால் மட்டுமே மாணவ-மாணவிகள் கல்வி கற்க செல்ல ஏதுவாக அமையும். இதற்கு மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×