search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.29 கோடியில் வளர்ச்சி பணிகள்
    X

    தேவகோட்டை யூனியன் கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடந்தது.

    ரூ.4.29 கோடியில் வளர்ச்சி பணிகள்

    • தேவகோட்டை யூனியனில் ரூ.4.29 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்தது.
    • இந்த தகவலை தலைவர் பிர்லா கணேசன் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் நடராஜன் ராஜாத்தி முன்னிலை வகித்தார். ஆனையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், அண்ணா திட்டம் மூலம் உடனடி வளர்ச்சி திட்ட பணிகள் தேவைப்படும் 8 ஊராட்சிகளில் ரூ.4.29 கோடியில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு அவை டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மேலும் 2 ஊராட்சிகளில் அவசர வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்து வருகின்றனர். பொது நிதியிலும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறோம் என்றார்.

    கவுன்சிலர் ரவி பேசுகையில், கடந்த மாதங்களில் டெண்டர் விடப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு பொறியாளர் பதிலளிக்கையில், இப்போது தான் ஒவ்வொரு படிகளாக நடைபெற்று வருகிறது என்றார்.கவுன்சிலர் ஜான்சி ராணி பேசுகையில், கிளியூர்- புலியால் ரோடு சமீபத்தில் தான் போடப்பட்டது. அந்தச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. வெற்றிவேல் ஊராட்சிக்குட்பட்ட வாய்வுநேந்தல் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மாணவர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் வெளியே சென்று வரும் சூழ்நிலை உள்ளது என்றார்.

    இதற்கு பதில் அளித்த யூனியன் தலைவர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நன்றி கூறினார்.

    Next Story
    ×