என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டரசன்கோட்டையில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பொதுமக்களுடன் பங்கேற்றார்.
பொங்கல் விழாவில் கலெக்டர் பங்கேற்பு
- நாட்டரசன்கோட்டையில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
- செயல் அலுவலர் ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் சுற்று லாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாவட்ட மதுசூதன் ரெட்டி பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசுகை யில், நாட்டரசன்கோட்டை பேரூ ராட்சியில் சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் புகழை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம் மற்றும் பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த விழாவில், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ள வெளி நாட்டு சுற்றுலாப் பயணி களும் கலந்து கொண்டது பெருமைக்குரிய ஒன்றாகும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கலெக் டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, உதவி சுற்றுலா அலுவலர் சங்கர், காளையார்கோவில் வட்டாட்சியர் பஞ்சவர்ணம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சித் தலைவர் பிரியதர்சினி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






