search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகழாய்வுப்பணிகள் முடிந்த பிறகு அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்க ஏற்பாடு
    X

    கீழடியில் கட்டப்பட்டு வரும் அகழாய்வு வைப்பக கட்டிடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ., தொல்லியல்துைற இணை இயக்குநர் ரமேஷ் உள்ளனர்.

    அகழாய்வுப்பணிகள் முடிந்த பிறகு அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்க ஏற்பாடு

    • கீழடியில் 8-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் முடிந்த பிறகு அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில், கீழடியில் கட்டப்பட்டு வரும் புதிய அகழாய்வு வைப்பக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகழாய்வு வைப்பக கட்டுமானப் பணிகள் முழுமை பெற்றுள்ளது. அகழ் வைப்பகத்தில் அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப் பொருட்கள் உலகத்தரத்திலான வகையில் காட்சிப்படுத்த துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, வரைபடங்கள்

    தயாரிக்கப்பட்டு சுவற்றில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள், புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சி ப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் ஏறத்தாழ 10,210 வகை பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அகழ்வராயச்சி பொ ருட்களை காட்சிப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகளால் அகழாய்வு வைப்பகம் திறந்து வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள பொருட்களையும் காட்சிப்படுத்த இதுவும் ஒருவகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    தற்போது 8-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்றபின் முதலமைச்சர் மூலம் அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்கப்படும். கீழடியில் அகழ்வராய்ச்சியின் மூலம் கிடைக்கும் பொருட்களை காட்சிப்படுத்தியும் அந்த பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு புரியும் வகையில் குறும்படங்கள் மூலம் விளக்கப்படுத்திடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    முன்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் முதல் தற்போது வரை பயன்படுத்திய பொருட்கள் குறித்த குறும்படம் தயாரிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தமிழரசிரவிக்குமார் எம்.எல்.ஏ., முதன்மை தலை மைப்பொறியாளர் விஸ்வநாதன், மதுரை மண்டல தலைமைப்பொ றியாளர் ரகுநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பாரம்பரிய கட்டிடக்கோட்டம்) மணிகண்டன், தொல்லியியல் துறை இணை இயக்குநர் ரமேஷ், திருப்புவனம் பேரூராட்சித்தலைவர் சேங்கைமாறன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×