என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
  X

  சிகிச்சை பெற்றுவரும் ஆறுமுகம்.

  முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமண விழாவில் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • அரிவாளால் வெட்டிய பிரவீனை கைது செய்யக்கோரி மானாமதுரை -பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் உறவி னர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  சிவகங்கை

  சிவகங்கை அருகே சுந்தரநடப்பு கிராமத்தில் நேற்று ஒரு திருமண விழா நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கலந்து கொண்டார்.

  அப்போது திருமண வீட்டிலிருந்த மணக்கரையை சேர்ந்த பிரவீன் என்பவர் முன்விரோதம் காரணமாக ஆறுமுகத்துடன் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

  இதனை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை உறவினர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  திருமண விழாவுக்கு வந்த ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டிய பிரவீனை கைது செய்யக்கோரி மானாமதுரை -பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் உறவி னர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பிரவீனை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

  Next Story
  ×