search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை தேடுதல் வேட்டை
    X

    கண்ணன்கோட்டை கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 2 பெண்கள் குடும்பத்தினரை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை தேடுதல் வேட்டை

    • தேவகோட்டை அருகே தாய்-மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை தேடுதல் வேட்டை நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கனகம், அவரது மகள் வேலுமதி ஆகியோர் கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தனர். இந்த சம்பவத்தில் வேலுமதியின் மகன் மூவரசு (வயது 12) என்ற சிறுவன் படுகாயம் அடைந்தான். அவனுக்கு மதுரை தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள்.

    இந்த நிலையில் கண்ணங்கோட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணின் திருமணத்திற்கு நகைகள் மற்றும் பணம் வழங்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    கூட்டத்தில் அனைத்து நாட்டார்களும் மற்றும் கிராமத்தார்களும் பங்கேற்ற னர். அவர்கள் 2 பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற உண்மை குற்றவாளி கண்டுபிடிக்க வேண்டும்.பா திக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டு தொகையாக அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தேவகோட்டை பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குற்றவாளிகளை விரை வில் கண்டுபிடிக்கவில்லை என்றால் தேவகோட்டையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கொலையுண்ட 2 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். இதுபற்றி அறிந்த அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன ரெட்டி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ், தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சித்தனூர் சரவணன், மெய்யப்பன், கார்த்திக் மற்றும் கிராம மக்கள்அஞ்சலி செலுத்தி னர்.இதன் பிறகு கொலை யுண்ட கனகம், வேலுமதி உடல்களை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.

    இந்த கொலையில் துப்பு துலக்க போலீஸ் டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ ராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த கண்ணங்கோட்டை கிராமத்தில் முகாமிட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டையில் கடந்த சில மாதங்களாக பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதும், பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் வீடுகளை தீயிட்டு கொளுத்துவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×