search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிக்னல் கோளாறு திடீர் பழுது- வள்ளியூர் ரெயில்வே கிராசிங்கில் மெதுவாக சென்ற ரெயில்கள்
    X

    தெற்கு வள்ளியூர் ரெயில்வே கிராசிங்கில் கேட் அடைக்கப்பட்டு இருந்த காட்சி.

    சிக்னல் கோளாறு திடீர் பழுது- வள்ளியூர் ரெயில்வே கிராசிங்கில் மெதுவாக சென்ற ரெயில்கள்

    • தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் வழியாக பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன.
    • சிக்னல் பழுதால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சிக்னல் நேற்று மாலை திடீரென பழுதடைந்தது.

    இதனால் அந்த நேரத்தில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ஆகியவை தங்களது வேகத்தை குறைத்து வள்ளியூர் ரெயில் கிராசிங்கை மெதுவாக கடந்து சென்றன. சிக்னல் பழுதடைந்ததினால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்து நின்றன. அதன்பின்னர் உடனடியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் அங்கு சென்று சிக்னல் கோளாறை சரி செய்தனர்.

    Next Story
    ×