search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
    X

    சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

    • 8-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது
    • 28-ந்தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திரு விழா நிறைவு பெறுகிறது.

    பொள்ளாச்சி,

    கிணத்துக்கடவு அருகே சூலக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் அதிக பக்தர்கள் வருவது வழக்கம்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்திருவிழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டி ற்கான தேர் திருவிழா வருகிற 8-ந் தேதி காலை முகூர்த்தக்கால் நடும் நிக ழ்ச்சியுடன் தொடங்குகிறது. 9-ந் தேதி காலை வேல் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு பூச்சாட்டு விழாவும் நடைபெறுகிறது.

    15-ந் தேதி இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது. 16-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியும், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 17-ந் தேதி காலை யாக சாலை ஆரம்பம் அதனை தொடர்ந்து கொடி யேற்றம் நிகழ்ச்சி நடைபெறு கிறது. இரவு மாரியம்மன் சிம்மவாகனத்தில் திருவீதி உலா விழா நடைபெறுகிறது.

    18-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதனை தொடர்ந்து பொங்கல் விழாவும் நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு மாரி யம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும், நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 5 மணிக்கு மாரியம்மன், திருத்தேர் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    26-ந்தேதி 2-ம் நாள் தேர் திருவிழாவும், 27-ந் தேதி 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 28-ந்தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திரு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்த சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×