என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட முகமதீன் அன்சாரி.
பண்ருட்டியில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்: போக்சோவில் முதியவர் கைது
- 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி வி.ஆண்டிக்கு ப்பம் ஜாகீர் உசைன் தெருவை சேர்ந்த முகமதீன் அன்சாரி (வயது 56) இவர் அதே பகுதியை சேர்ந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்க ப்பட்ட சிறுமியின் பெற்றோர்பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். இதனை தொடர்ந்துபண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்குபதிவு செய்து முகமதீன் அன்சாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துபண்ருட்டி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story