search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் உரிய அனுமதி பெறாத கழிவு நீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - சுகாதார விதிமுறைகளை அறிவித்து நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
    X

    காயல்பட்டினத்தில் உரிய அனுமதி பெறாத கழிவு நீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - சுகாதார விதிமுறைகளை அறிவித்து நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

    • காயல்பட்டினம் நகரா ட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மட்டுமே கழிவுநீரை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவு நீரை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்ப ட்டுள்ளன.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் குமார் சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காயல்பட்டினம் நகரா ட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மட்டுமே கழிவுநீரை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாத கழிவுநீர் வாக னங்கள் கண்டறிய ப்பட்டால் பறிமுதல் செய்ய ப்படும். கழிவுநீர் வாகன ங்களுக்கு உரிமம் பெற ஒரு வாரம் கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளது.

    அதே போல் பொதுமக்கள் நகராட்சியால் உரிமம் வழ ங்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே தங்களது வீடு, வணிக நிறுவனங்களில் உள்ள கசடு கழிவு தொட்டிகளை சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.உரிமம் பெறாதவர்களை புறக்கணிக்க வேண்டும். உரிமம் பெற்றுள்ள கழிவுநீர் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றி பணி செய்ய வேண்டும். காயல்பட்டினம் நகராட்சியில் கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கும் வரை திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான தோப்பூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவுகளை கொண்டு சேர்க்க வேண்டும். வேறு எங்கும் திறந்த வெளிகளில் நீர் நிலைகளில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்தக்கூ டாது. அவ்வாறு ஏற்படுத்து வது கண்டறியப்பட்டால் வாகன ங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமை யான நடவடிக்கை எடுக்க ப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.

    Next Story
    ×