search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம்
    X

    புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கை ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி.

    ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம்

    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் புதுமண தம்பதியர் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்று பேசினார். ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி னார். கருத்தரங்கில் புதுமண தம்பதியர் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், பேராசிரியர் ஜேனட் சில்வியா ஜெய ரோஸ் ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு மருத்து வம், ஊட்டச்சத்து, மற்றும் சுகாதாரம் சார்ந்த ஆலோ சனைகளையும், வாழ்த்து களையும் வழங்கி னர்.

    புதுமண தம்பதிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

    விழாவில் ஆழ்வார் திருநகரி குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வை யாளர்கள், வட்டார ஒருங்கி ணைப் பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×