என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதா?- சீமான் ஆவேசம்
    X

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதா?- சீமான் ஆவேசம்

    • கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
    • நான் இருக்கும் வரை நிலக்கரி எடுக்க முடியாது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர்கள் வெளியே வந்து போராட அனுமதித்திருக்க கூடாது.

    எல்லா பிரச்சினைகளுக்கும் குழு மட்டுமே அமைக்கப்படுகிறது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதா? எத்தனை காலத்திற்கு நிலக்கரி எடுக்க முடியும்?. நான் இருக்கும் வரை நிலக்கரி எடுக்க முடியாது.

    சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை மூலம் மின் உற்பத்தியை பெருக்க அரசு முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×