search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை
    X

    கோப்பு படம்

    பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை

    • பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
    • மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்

    தேனி:

    அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

    மேலும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச கல்வி திட்டத்தின்கீழ் நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை டிசம்பர் 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் டிசம்பர் 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். ஜனவரி 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×