என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி- ராஜா எம்.எல்.ஏ., சேர்மன் உமா மகேஸ்வரி பங்கேற்பு
    X

    சங்கரன்கோவிலில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.


    சங்கரன்கோவிலில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி- ராஜா எம்.எல்.ஏ., சேர்மன் உமா மகேஸ்வரி பங்கேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • ராஜா எம்.எல்.ஏ. கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, தென்னிந்திய செங்குந்தர் மகாசபை சங்க மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராஜா எம்.எல்.ஏ. கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், புடவை உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினார். 52 கர்ப்பிணிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    இதில் மேற்பார்வையாளர் செல்வம், வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரதீப், வட்டார திட்ட தலைவர் மகேந்திரன், நகராட்சி கவுன்சிலர் புஷ்பம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், வீரமணி, பாரதிராஜா, ஜெயக்குமார், தீன் மைதீன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×