என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா நடைபெற்ற போது எடுத்த படம்
வள்ளியூர் அருகே தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

- வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் கழியலாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், நாட்டியம் போன்ற பல்–வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டி.ராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி குழு மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார், எம்.ஜோசப் பெல்சி, பண்ணை கே.செல்வகுமார், பி.ரகுநாதன், டி.சாரா சவுந்தரராஜன், பி.செல்வராஜ் நாடார், கோபால் நாடார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தமிழ்த்துறை, கவின்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரகாஷ், கிராமிய கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் செய்து இருந்தனர்.