search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்புஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்புஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • கடந்த 3 வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
    • ஓமலூரில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரம் கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

    ஓமலூரில் கன மழை

    குறிப்பாக ஓமலூரில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரம் கன மழையாக கொட்டியது. பின்னர் விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 100-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி உள்ள நிலையில் மற்ற ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மேலும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 11 மணியளவில் சாரல் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 19 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 3.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 22.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×