search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோர்ட் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்
    X

    மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பின் சேலம் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    சேலம் கோர்ட் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்

    • சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    சேலம்:

    குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்து வதற்கான நடவடிக்கை களில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதம்

    அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செய லாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். இதில் கூட்ட மைப்பின் துணைத் தலை வர்கள் மூர்த்தி, பொன்ர மணி, இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம் மாவட்ட வழக்க றிஞர்கள் சங்க செயலாளர் முத்தமிழ் செல்வன் கூறுகை யில், குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கி றோம். மேலும் அந்த திருத்தத்தை கைவிடா விட்டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    Next Story
    ×