பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி சாவு

தங்கம் (51). கூலித் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று மதுபோதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார்.
பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி சாவு
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பொத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கம் (51). கூலித் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தங்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி தங்கத்தின் மகன் கோகுல்நாத் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com