என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் குடும்ப தகராறில் விபரீதம் விஷம் குடித்த பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- ஜெயக்குமார். இவரது மனைவி பிரபா (வயது 28). ஜெயக்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த பிரபா கணவரை கண்டித்துள்ளார்.
- இந்த நிலையில் நேற்று இரவும் கணவன் மனைவி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மா பேட்டை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி பிரபா (வயது 28). ஜெயக்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொ டர்பு இருப்பதை அறிந்த பிரபா கணவரை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக கண வன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் கணவன் மனைவி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரபா, வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கினார். இதை அறிந்த குடும்பத்தினர் பிரபாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






