search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் நூதன முறையில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி
    X

    சேலத்தில் நூதன முறையில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி

    • செல்போனுக்கு வந்த டெலிகிராம் குறுந்தகவலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்துள்ளது.
    • இதை உண்மை என்று நம்பிய அமுதா பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுந்தகுமார். இவரது மனைவி அமுதா வயது 41 இவரது செல்போனுக்கு வந்த டெலிகிராம் குறுந்தகவலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்துள்ளது.இதை உண்மை என்று நம்பிய அமுதா அந்தக் குறுந்தகவலில் வந்த செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது அதில் பேசிய மர்ம நபர் ரூ.7,32,399 பணத்தை அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தினால் கார் உடனடியாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அமுதா பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.அதன் பின்னர் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமுதா இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி ராஜமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மகன் பிரசாத் வயது 24 இவரது செல்போனில் வந்த குறுந்தகவலில் அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதைக் கண்ட பிரசாத் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது அவர்கள் பணம் கட்டி சில நிபந்தனைகளை செய்யச் சொல்லி உள்ளனர். இதை உண்மை என்று நம்பிய பிரசாத் அவர்கள் கூறியபடி ரூ.50000 பணத்தைக் கட்டி அவர்கள் கூறிய நிபந்தனைகளை செய்து முடித்து உள்ளார்.அதன் பின்னர் பணம் தனது வங்கிக் கணக்கு திரும்ப வந்துவிடும் என்று அவர்கள் கூறியதை நம்பி காத்திருந்தார். ஆனால் அந்த மர்ம நபர்கள் கூறியபடி பணமும் வரவில்லை வேலையும் வரவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசாத் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×