search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானிய விலையில் விதை நெல்
    X

    மானிய விலையில் விதை நெல்

    • சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் ஏறக்குறைய 2200 ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது.
    • இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , அரசு மானிய விலையில் விதை நெல் வழங்க, புத்திரகவுண்டன்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் ஏறக்குறைய 2200 ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , அரசு மானிய விலையில் விதை நெல் வழங்க, புத்திரகவுண்டன்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் கூறியதாவது:- சம்பா பருவத்தில் நெல் நடவு செய்ய ஆடி 18-க்கு பின், நாற்று விடும் பணியை விவசாயிகள் தொடங்குவது வழக்கம். சம்பா பருவத்திற்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, கோ -51, ஏ.டி.ட்டி-45, ஏ.டி.ட்டி-53, டி.கே.எம் -13 மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா , தங்க சம்பா ஆகிய ரகங்கள் ஏத்தாப்பூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவரை, உளுந்து நிலக்கடலை விதைகளும் விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. விதை நேர்த்தி செய்வதற்கு தேவையான உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் , பொட்டாஸ், ஜிங் பாக்டீரியா மற்றும் அனைத்து பயிர்களுக்கும் தேவையான நுண்ணூட்ட சத்துக்களும், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், ட்ரைகோடெர்மா ஆகியவைகளும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், ஆதார் மற்றும் சிட்டா நகலுடன் ஏத்தாப்பூரிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையும், கருமந்துறை துணை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களையும் அணுகலாம் என்றார்.

    Next Story
    ×