என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் அருகே குடிநீர் - சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
    X

    ஓமலூர் அருகே குடிநீர் - சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

    • ஓம் சக்தி நகர் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • இதுவரையில் எங்களுக்கு மேட்டூர் காவிரி குடிநீர் வசதியே செய்து கொடுக்கப்படவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது ஓம் சக்தி நகர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் இப்பகுதியில் சுமார் 650 வீடுகள் வாங்கி குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிக்கு இதுவரை மேட்டூர் காவிரி குடிநீர் வசதி என்பது இல்லாததால் நாங்கள் பஞ்சாயத்து ஆழ்துளை கிணறு தண்ணீரைதான் குடிப்பதற்கும், எல்லா வசதிக்கும் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதி சுற்றியுள்ள கிராமமான மாரமங்க லத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, பூமிநா யக்கன்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, செங்கா னூர், தோளூர் ஆகிய பகுதிக ளுக்கெல்லாம் மேட்டூர் காவிரி குடிநீர் வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மட்டும் மேட்டூர் காவிரி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட வில்லை. இது குறித்து பலமுறை கிராம சபைகூட்டத்திலும், ஊராட்சி மன்ற தலைவரையும், துணை தலைவர் ஊராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து கடிதம் கொடுத்தோம். இதுவரையில் எங்களுக்கு மேட்டூர் காவிரி குடிநீர் வசதியே செய்து கொடுக்கப்படவில்லை.

    மேலும் எங்கள் பகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவற்றை விரைவாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×