search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி சுகவனேஸ்வரர்  கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
    X

    விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுகவனேவரர் கோவிலில் தே.மு.தி.க.வினர் தங்க தேர் இழுத்து வழிப்பட்ட காட்சி.

    விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி சுகவனேஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு

    • விஜயகாந்த் கடந்த 18-ந் தேதி உடல் நல குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அவர் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கடந்த 18-ந் தேதி உடல் நல குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சுகவனேஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் சுகவனேஸ்வரருக்கும் சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அப்போது விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி தங்க தேரை இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் தனசேகர், துணைச்செயலாளர் ராஜ், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.நாராயணன், கேப்டன் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம், கிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் எம்.பி.விஜய், அம்மாபேட்டை பகுதி செயலாளர் செல்வகுமார், சேலம் ஒன்றிய செயலாளர் அப்பாவு, பேரூர் செயலாளர் கார்த்தி மற்றும் செவ்வாய்பேட்டை நிர்வாகிகள் குணசேகர், கார்த்தி, வார்டு நிர்வாகிகள் செல்வம், ஆசைத்தம்பி, கிருஷ்ணன், விஷ்வா, பாபு, ஷபி, சம்பத், முனியப்பன், ஏழுமலை, முருகன், சக்திவேல், ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×